Wednesday, September 9, 2009

பிரிவு சேரல்

விலகிப்போகும் நிர்ப்பந்தத்தனிமையும்
பழகியிரா மௌனமும்
பரிசளிக்கப்படுகிறது உனக்கு.
இனி நீ எங்கு வேண்டுமெனினும்
சென்று கொள்ளலாம்.
போவதற்கு முன்
உன் ஒரு புன்னகையை மட்டும்
தந்து செல்.
பின்னொரு நாள்
அதைப்பற்றி
நான் கரைசேரக்கூடும்.

1 comment:

கவின் said...

கர தான சேந்திடுவோம்.